14
Mon, Oct
13 New Articles

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 16 ஆட்டோக்களில் வந்த வெளிநாட்டு பயணிகள்

Travel Guides

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 16 ஆட்டோக்களில் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்தனர்.

 

ஆண்டுதோறும் சென்னையில் உள்ள ரிக்ஷா சேலஞ்ச் அமைப்பு சார்பில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆட்டோக்களில் அழைத்து செல்லப்படுவது வழக்கம்.கடந்த 10 வருடமாக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வருட பயணம் கடந்த 28-ந் தேதி சென்னையில் இருந்து தொடங்கியது. 16 ஆட்டோக்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, போலந்து, மெக்சிகோ ஆகிய 8 நாடுகளை சேர்ந்த 42 சுற்றுலா பயணிகள் புறப்பட்டனர். இதில் 16 பெண்களும் அடங்குவர்.

கன்னியாகுமரி வருகை வரும் வழியில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். மேலும் பள்ளி கட்டிட நிதிக்கும் வசூல் செய்யப்பட்டது. நேற்று மாலை அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்தடைந்தனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள், 8 நாட்களில் 1200 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் பிரின்ஸ்லி, அரவிந்த் ஆகியோர் தெரிவித்தனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS