25
Sat, Mar
29 New Articles

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Other

நாகர்கோவில், அக்.09: பெண் ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் இணைந்து நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாகர்கோவிலில் பொதுமேலாளர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். 

சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய 11 பெண் ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல, தக்கலையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் காளியப்பன் தலைமையிலும், மார்த்தாண்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க உதவி செயலாளர் சுயம்புலிங்கம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS