19
Sun, Nov
11 New Articles

பொய்கை அணைப் பகுதியில் 2 சிறுத்தைகள் நடமாட்டம்

Other

ஆரல்வாய்மொழி, மார்ச் 29: ஆரல்வாய்மொழியில் உள்ள பொய்கை அணைப் பகுதியில் 2 சிறுத்தைகள் நடமாட்டம் இருந்துள்ளதையடுத்து தொழிலாளர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.

Page 2

ஆரல்வாய்மொழி மலை அடிவாரத்தில் பொய்கை அணை உள்ளது. தற்போது இந்த அணையில் சுமார் 12 அடிக்கு தண்ணீர் உள்ளது. காட்டுப்பகுதியில் கரடி, காட்டுபன்றிகள், சிறுத்தைகள், மிளா போன்ற வனவிலங்குகள் உள்ளன.

இங்குள்ள மலைப்பாதையில் சுங்கான் ஓடை உள்ளது. பொய்கை அணைக்கும், சுங்கான் ஓடைக்கும் சில கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த ஓடை வழியாக மழைக்காலங்களில் வெள்ள நீர் பொய்கை அணைக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது இந்த ஓடை தூர்ந்து போய் உள்ளதால் பொய்கை அணைக்கு தண்ணீர் வருவதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஓடையை சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக தினமும் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மலைப் பாதை வழியாக நடந்து சென்று பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாலை பணி முடிந்ததும் தொழிலாளர்கள் ஊர் திரும்பி விடுவார்கள். வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு மலைப்பாதை வழியாக நடந்து வந்தனர். அப்போது ஒரு புதரில் இருந்து உறுமல் சத்தம் கேட்டுள்ளது.

இந்த சத்தத்தை கேட்டு தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்த சமயத்தில் 2 சிறுத்தைகள் பாய்ந்து சென்றுள்ளது. உடனே தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த தகவலை அவர்கள் ஊருக்குள் வந்து பொதுமக்களிடம் தெரிவித்தனர். தற்போது கோடைக்காலம் என்பதால் தண்ணீருக்காக சிறுத்தைகள் பொய்கை அணை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும் இறைச்சியை தேடி வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பொய்கை அணை பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் அங்கு செல்லும் தொழிலாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS