நாகர்கோவில், நவ.09: கன்னியாகுமரி சீசன் கடைக்கு வாடகை அதிகமாக இருப்பதாக கூறி கர்நாடக வியாபாரிகள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரியில் சீசன் கடை போட வந்திருந்த டென்சன் தலைமையில் திபெத் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கன்னியாகுமரியில் நவம்பர் 17ம் தேதி முதல் ஜனவரி 17ம் தேதிவரை சீசன் காலமாகும். கடந்த ஆண்டு சீசனில் 30 குடும்பங்கள் வந்திருந்தோம். இதில் 20 கடைகள் 15 ஆயிரம் ரூபாய் வாடகையிலும், 10 கடைகள் 18 ஆயிரம் ரூபாய் வாடகையிலும் போட்டிருந்தோம். அப்போது நஷ்டம் ஏற்பட்டது.
அதனாலேயே 6 குடும்பங்கள் இந்த ஆண்டு வரவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஒரு கடைக்கு 30 ஆயிரம் ரூபாய் வாடகை நிர்ணயித்துள்ளனர். எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 20 ஆயிரம் ரூபாய்க்கே கடை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் திபெத் பகுதியிலிருந்து கம்பளி வியாபாரத்துக்கு வந்தவர்கள் சிலரும் வியாபாரம் செய்ய அனுமதி உள்ளிட்டவை கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.
BLOG COMMENTS POWERED BY DISQUS