27
Thu, Jul
10 New Articles

கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பாதயாத்திரை

Temple

கன்னியாகுமரி, அக்.07: கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு இருமுடி கட்டுடன் பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர்.

 

அருமனை அருகே குமரி–கேரள எல்லையான காளிமலையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் துர்காஷ்டமி திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 11–ந் தேதி வரை 6 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடிகட்டி புனித நீர் சுமந்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம். 

அதன்படி பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன்பு நேற்று நடந்தது. ‘சமுத்திர கிரி ரத யாத்திரை’ என்ற பெயரில் தொடங்கிய இந்த யாத்திரைக்கு நாகர்கோவில் நகர ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் பாலகணேஷ் தலைமை தாங்கினார்.

பாதயாத்திரையை திருவனந்தபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வெள்ளிமலை தர்மபீடம் தலைவர் சுவாமி சைத்னயானந்த மகாராஜ் ஆசியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், விசுவ இந்து பரிஷத்தின் திருக்கோவில் திருமடங்களின் மாநில அமைப்பாளர் காளியப்பன், விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் குழைகாதர், மாவட்ட தலைவர் குமரேசதாஸ், இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன், துணைத்தலைவர் வக்கீல் அசோகன், பா.ஜனதா மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரையின் முன்னால் அலங்கரிக்கப்பட்ட ரதமும் சென்றது. கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த பாதயாத்திரை விவேகானந்தபுரம், கொட்டாரம், அச்சன்குளம், பொற்றையடி, சுசீந்திரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, வடசேரி, கிருஷ்ணன்கோவில், வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், சுங்கான்கடை, தோட்டியோடு, வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, தக்கலை, சுவாமியார்மடம், இரவிபுதூர்கடை, மார்த்தாண்டம், உண்ணாமலைக்கடை, ஆற்றூர், சிதறால், களியல், கடையாலுமூடு வழியாக வருகிற 9–ம் தேதி பத்துகாணி காளிமலை பத்திரகாளி அம்மன் கோவிலை சென்று அடைகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS