29
Wed, Mar
29 New Articles

கவிமணி சிலை இடமாற்றம்

Memorial

சுசீந்திரம், ஜன.25: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் சிலை போலிஸ் பாதுகாப்புடன் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

 

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த தேரூரை  சேர்ந்தவர்  தேசிக விநாயகம் பிள்ளை. இவருக்கு தமிழக அரசின் சார்பில் முழு உருவ சிலை அமைக்க  2012 ம் ஆண்டு மே  மாதம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் பிறந்த ஊரான தேரூரில் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தேரூர் கிராமமாக இருப்பதால் சுசீந்திரத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, சுசீந்திரம் பஸ்நிலைய சந்திப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.4½ லட்சம் செலவில், 4 அடி உயரத்தில் பீடமும், 6 அடி உயரத்தில் வெண்கல சிலையும் நிறுவப்பட்டது.

இந்தநிலையில் உச்சநீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தலைவர்களின் உருவச்சிலையை நிறுவக்கூடாது என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கவிமணியின் சிலை 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு தரப்பினர் கவிமணியின் சிலையை உடனே திறக்ககோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கவிமணியின் சிலையை பொக்லைன் எந்திரம் மூலம் சுசீந்திரம் பஸ்நிலைய சந்திப்பில் இருந்து, இடமாற்றம் செய்து சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சிலையை நிறுவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று சுசீந்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

BLOG COMMENTS POWERED BY DISQUS