29
Mon, May
12 New Articles

குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் பெருஞ்சாணி அணை மூடப்பட்டது

All seasons

கன்னியாகுமரி, நவ. 02: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் புத்தன் அணைப்பகுதியில் 54.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

 குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அணைப்பகுதிகளில் சுமாரான மழையாகவும், ஊரகப்பகுதிகளில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது. நாகர்கோவில் உள்ளிட்ட குமரி மாவட்டப்பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது.

நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டப்பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:–

பேச்சிப்பாறை– 7.2, பெருஞ்சாணி– 52, சிற்றார் 1– 17.4, சிற்றார் 2– 3.6, பொய்கை– 2.6, மாம்பழத்துறையாறு– 8.8, முக்கடல்– 22, பூதப்பாண்டி– 10.5, சுருளோடு– 36, கன்னிமார்– 1.5, ஆரல்வாய்மொழி– 2.6, பாலமோர்– 19.2, மயிலாடி– 9.2, கொட்டாரம்– 13.2, இரணியல்– 14.2, ஆணைக்கிடங்கு– 14, குருந்தங்கோடு– 13, அடையாமடை– 18, கோழிப்போர்விளை– 2.1, முள்ளங்கினாவிளை– 4, புத்தன் அணை– 53.4, திற்பரப்பு– 4.4 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 143 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 293 கன அடி தண்ணீரும், சிற்றார்–1 அணைக்கு 32 கன அடி தண்ணீரும், சிற்றார்–2 அணைக்கு 55 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாசனத்துக்கு தண்ணீர் தேவை ஏற்படாததின் காரணமாக பேச்சிப்பாறை அணை நேற்று முன்தினம் மூடப்பட்டது. இந்தநிலையில் பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறப்பதும் நேற்று நிறுத்தப்பட்டு, மூடப்பட்டது.

நேற்று முன்தினம் 15½ அடியாக உயர்ந்திருந்த பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று மேலும் 3 அடி உயர்ந்தது. இதனால் நேற்றைய நிலவரப்படி பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 18.50 அடியாக இருந்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS