23
Wed, Aug
6 New Articles

இத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு

Social Media

ஜூன், 24: இத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

 

குமரி மாவட்டம் முட்டத்தைச் சேர்ந்த சகாய ஜிஜோ (வயது 23), குறும்பனையை சேர்ந்த ஜான் மில்டன், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் உள்ளிட்ட பிற மாநில கப்பல் ஊழியர்களும், லெபனான் நாட்டு கப்பல் ஊழியர்களும் என மொத்தம் 16 பேர் லெபனான் நாட்டை சேர்ந்த முகமது சித்தாவி என்பவரது சரக்கு கப்பலில் கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெர்மனி நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு பயணம் செய்தனர். அப்போது இத்தாலி நாட்டை சேர்ந்த வரி மற்றும் காவல்துறையினரால் 16 பேரும் கைது செய்யப்பட்டு இத்தாலியில் உள்ள காசா சர்குண்டாரியாலே சான் என்ற சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தியா மற்றும் லெபனான் நாட்டு கப்பல் ஊழியர்கள் பணியாற்றிய இந்த கப்பலில் 40 டன் போதைப்பொருள் இருந்ததற்காக இந்திய கப்பல் ஊழியர்களுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், லெபனான் நாட்டு கப்பல் ஊழியர்களுக்கு 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. 9 மாதத்துக்குப் பிறகு மேல்முறையீடு செய்தததில் கடந்த 16–ந் தேதி இத்தாலி கோர்ட்டு இந்திய கப்பல் ஊழியர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறி அவர்களை விடுதலை செய்தது. அதைத்தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள் இந்திய கப்பல் ஊழியர்களை விமானம் மூலம் டெல்லி அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு கப்பல் ஊழியர்கள் சென்றனர்.

குமரி மாவட்டத்தை சேர்ந்த சகாய ஜிஜோ, ஜான்மில்டன் ஆகியோர் சொந்த ஊர் திரும்பினர். அதையடுத்து சகாய ஜிஜோ தனது உறவினர்களுடன் நேற்று தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தும், இத்தாலி நாட்டு கோர்ட்டில் தங்களுக்காக வாதாடிய வக்கீல் பிசியானா புளியாசியாவுக்கும், உதவி செய்த அருட்பணியாளர் ஜியுசுப்பேவுக்கும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தும் மனு கொடுத்தனர்.

பின்னர் சகாயஜிஜோ கூறும்போது, “இத்தாலி நாட்டில் 2 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது தங்களுக்கு எந்த துன்பமும் கொடுக்கவில்லை. உடனிருந்த இத்தாலி நாட்டு கைதிகள் குளிர்காலத்தில் தங்களுக்கு சுவட்டர் மற்றும் கம்பளி போர்வைகள் வழங்கி உதவினர். 3 வேளையும் நல்ல உணவு வழங்கப்பட்டது. இத்தாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கப்பல் ஊழியர்களை சிறையில் சந்தித்து பல உதவிகள் செய்தனர். குடும்பத்தினருடன் பேச தொலைபேசி வசதி செய்து கொடுத்தனர்“ என்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS