இரயுமன்துறை கடலோர இளைஞர் இயக்கம் சார்பில் கால்பந்து போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பூத்துறை, தூத்தூர், சின்னதுறை, மார்த்தாண்டன்துறை, இனயம் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த அணியினர் பங்கேற்றனர். இதில் இரயுமன்துறை அணி முதல்பரிசு வென்றது. வெற்றிபெற்ற அணிக்கு விளவங்கோடு எம்.எல்.ஏ. எஸ். விஜயதாரணி சுழற்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார்.
இந்த விழாவில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலர் ஜார்ஜ் ராபின்சன், இடைக்கோடு பேரூராட்சித் தலைவர் ராஜா ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் ஜோதிஸ்குமார், ராஜகோபால் மற்றும் கடலோர மக்கள் இயக்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.