24
Sun, Sep
8 New Articles

தி.மு.க. மகளிரணி கூட்டம் - கனிமொழி எம்.பி. பங்கேற்பு

Social Media

நாகர்கோவில், ஜன.25: தி.மு.க. மகளிரணி சார்பில் இன்று (திங்கள்கிழமை) நாகர்கோவிலில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார்.

 குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ரோட்டில் ஆயர் இல்லம் எதிரே உள்ள மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் என்.சுரேஷ்ராஜன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. ஆலோசனைகள் வழங்கி பேசுகிறார். 

இந்த கூட்டத்தை தொடர்ந்து மாலையில் கனிமொழி எம்.பி. மார்த்தாண்டம் செல்கிறார். அங்கு காந்தி மைதானத்தில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS