கன்னியாகுமரி : ரூபெல்லா தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என யுனிசெஃப் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
நாகர்கோவில் குடிநீரில் புழுக்கள்
நாகர்கோவில், ஜுன் 06: நாகர்கோவில் நகரசபை மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் வந்ததால் பொதுமக்கள் அதிரிச்சி அடைந்தனர்.
இந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு
நாகர்கோவில், ஏப்.08: இந்தியாவில் 6 கோடி பேர் சர்க்கரை நோய பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி டீன் வடிவேல் முருகன் கூறினார்.
அரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி
ஆசாரிப்பள்ளம், ஜன.24: நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி புதிதாக நிறுவப்பட்டுள்ளது.
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட காசநோய் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான காசநோய் தன்மைகள் குறித்து அறியும் ‘சிபிநாட்‘ எனும் அதிநவீன கருவி புதிதாக நிறுவப்பட்டு உள்ளது. இந்த கருவியின் செயல்பாட்டை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குமரி மாவட்ட காசநோய் மையத்தின் மூலம் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 1,500 பேர் காசநோயால் பாதிக்கப்படுகிறார்கள். நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் மருத்துவர்கள் வழங்கும் அறிவுரைகளை பின்பற்றி தேவையான சிகிச்சைகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சை மேற்கொள்ளும்போது மருந்துகளை ஒருபோதும் இடைநிறுத்தம் செய்யக்கூடாது. மீறினால் அவர்கள் காசநோயாளிகளாக (எம்.டி.ஆர்–டிபி) மாறி விடுகிறார்கள்.
இந்த நோயை உடனே கண்டறிய ‘சிபிநாட்‘ என்கிற அதிநவீன கருவி தமிழகத்தில் மிக சில இடங்களில் மட்டுமே இருக்கிறது. இது காசநோய் கிருமியை கண்டறிவதுடன், அது கூட்டு மருந்துக்கு கட்டுப்படுமா என்பதையும் துல்லியமாக தெரிவித்து விடும்.
இதுவரை கூட்டு மருந்திற்கு கட்டுப்படாத காசநோயின் தன்மையை கண்டறிய சளி மாதிரிகளை சென்னையில் உள்ள காசநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியே பரிசோதனை செய்யப்பட்டது. இனிமேல் அந்த பரிசோதனையை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் செய்து கொள்ளலாம். குமரி மாவட்டத்தில் கூட்டு மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகள் 43 பேர் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டாக்டர்கள் நீண்டகால சிகிச்சை அளித்து, அவர்களை குணப்படுத்தியுள்ளனர். பிற தனியார் ஆஸ்பத்திரிகளும் இங்கு இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.