24
Sun, Sep
8 New Articles

பறவைக்காய்ச்சல் பீதியால் கிருமி நாசினி தயாரிக்க செய்முறை விளக்கம்

Social Media

நாகர்கோவில், டிச.31: கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் பீதியால் கால்நடை மருத்துவ குழுக்கள் ஆய்வு செய்து கிருமி நாசினி தயாரிக்க செய்முறை விளக்கம் அளித்தனர்.

குருந்தன்கோடு கால்நடை மருந்தக கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில், கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் முருகேசன் தலைமையில் கால்நடை ஆய்வாளர் அன்பழகன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சேகர் குழுவினர் பறவை காய்ச்சல் பற்றிய ஆய்வில் ஈடுபட்டனர். கோழி பண்ணையாளர்களிடம் பறவை காய்ச்சல் வராமல் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கால்நடை மருத்துவர் முருகேசன் விளக்கினார்.

இது குறித்து டாக்டர் முருகேசன் கூறியதாவது :

 பறவை காய்ச்சல் நோயை ஏற்படுத்தும் அதி வீரிய தன்மை கொண்ட வைரசை கட்டுப்படுத்தும் குளோரின் டை ஆக்ஸைடு கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு வேதிப் பொருள் மற்றொரு வேதி பொருளுடன் நேரடியாக ஊற்றும் போது தீ பிடித்து விடும். எனவே இவற்றை கவனமாக கையாள வேண்டும். முக கவசம், கையுறை கண்டிப்பாக அணிய வேண்டும். கால்நடை மருத்துவர்களை அணுகி அவர்கள் கண்காணிப்பில் இந்த கரைசல்களை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS