24
Sun, Sep
8 New Articles

பார்வதிபுரத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக சோதனை தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது

Improvements

நாகர்கோவில், நவ.13: குமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் பணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், மத்திய மந்திரி நிதின்கட்காரி தொடங்கி வைத்தார்.

 

அதைத்தொடர்ந்து மார்த்தாண்டத்தில் மேம்பால பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதுபோல் பார்வதிபுரத்தில் மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் பாலம் அமைப்பதற்கு சோதனை தூண்கள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி பார்வதிபுரம் சந்திப்பில் நடந்து வருகிறது.

இந்த பாலம் ரூ.96 கோடி செலவில் ‘ஒய்‘ வடிவில் அமைக்கப்பட இருக்கிறது. அதாவது நாகர்கோவில் கிருஷ்ணகுமார் ஆஸ்பத்திரி அருகே தொடங்கி பார்வதிபுரம் மின்வாரிய அலுவலகம் வரை ஒரு பிரிவும், மற்றொரு பிரிவு பார்வதிபுரம் அய்யப்பன் கோவில் வரையும் அமைகிறது. இந்த சோதனை பணிகள் முடிவடைந்ததும் பாலத்திற்கான தூண்கள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS