19
Sun, Feb
20 New Articles

குளச்சலில் மீன்பிடி துறைமுகம்

Improvements
Typography

குளச்சல், மார்ச்:02:  குளச்சலில் மீன்பிடி துறைமுக பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

 

குளச்சலில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்கிற மீனவர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கடந்த 2008ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 

முதலில் கிழக்குப் பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் அலை தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டன. மேற்குப்பகுதி அலைத்தடுப்பு சுவர் 530 மீட்டர் நீளமும், கிழக்குப்பகுதி அலைத்தடுப்பு சுவர் 230 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்மேல் கோர்லாக் கட்டைகள் என்று அழைக்கப்படும் சிமெண்டு கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றின்மேல் காங்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 

இதற்கிடையே மற்றொரு பகுதியில் படகணையும் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மீனவர்கள் வலை பின்னும் கூடம், கழிப்பறை, அலுவலக கட்டிடம், டீசல் பங்க், மேல்நிலை குடிநீர் தொட்டி, கேன்டீன், மீனவர்கள் ஓய்வு அறை, பணிமனை பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. சாலை அமைப்பு பணிகளும் மும்முரமாக நடக்கின்றன. இந்த பணிகளின் நிமித்தமாக, கடலில் தேவையில்லாத மணல் ராட்சத கிரேன் மூலம் வெளியேற்றப்படுகிறது. 

மீன்பிடி துறைமுக பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குளச்சல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஏராளமான கட்டுமரங்கள், வள்ளங்கள் உள்ளன. இவற்றை கடலில் நங்கூரமிட்டு நிறுத்துவதற்கு தற்போது வசதிகள் இல்லை. மீன்பிடி துறைமுக பணிகள் நிறைவடையும் பட்சத்தில் படகுகளை நிறுத்தி வைக்க வசதி ஏற்படும். இதைப்போல ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று கூறப்படுகிறது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS