19
Sun, Feb
20 New Articles

கன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்

Law
Typography

நாகர்கோவில், ஜன. 25: நாகர்கோவிலில் குசந்தைகள் திரைப்பட விழா வரும் ஜனவரி 28 ம் தேதி தொடங்க இருப்பதாக கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார். 

 

குமரியில் வருகிற ஜனவரி 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை 4 நாட்கள் குழந்தை கள் திரைப் பட திருவிழா நடக்கிறது. காலை 9 முதல் 11 மணி வரை தேர்வு செய்யப்பட்ட 10 திரையரங்குகளில் இலவசமாக திரையிடப் படும். தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழி திரைப் படங்கள் இடம் பெறுகின்றன.

இதில் 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் தன்னம் பிக்கை, ஒழுக்கம் ஆகிய வற்றை மையக்கரு வாக கொண்டு பிலிம் டிவிஷன் தயாரித்த திரைப்படங்கள் திரை யிடப்படும். இதற்கான துவக்க விழா வரும் 28ம் தேதி காலை 9 மணிக்கு நாகர்கோவில் ராஜேஷ் தியேட்டரில் நடக் கிறது.

இதில் அரசு, உதவிபெறும், தனியார் பள்ளி மாணவ, மாணவியர் 25 ஆயிரம் பேர் பங்கு பெறுவர். திரையரங்குகள் அருகில் உள்ள பள்ளிகள் அதிகளவில் பங்கு பெறும். காலையில் இச்சிறப்பு திரைப்படங்கள் திரை யிடப்படுவதால் இதர காட்சிகளுக்கு பாதிப்பு இருக்காது. இதற்கு முன் இந்த விழா 2011ல் நடந்தது. அதன்பின் தற்போது நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS