26
Wed, Apr
21 New Articles

தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து மாற்றம் : கலெக்டர் தகவல்

Traffic

நாகர்கோவில்: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நாகர்கோவில் வரும் பேருந்துகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

 

இது குறித்து மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தீபாவளி திருநாளின்போது, பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கத்தின் போது, வருகிற 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது.  

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், கோவை, எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு  செல்லும் பஸ்கள் வழக்கம் போல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். 

கோயம்பேட்டில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச்சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம் எனக்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS