குமரி மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி பேரூராட்சி மற்றும் முழு சுகாதார இயக்கம் ஆகியவை சார்பில் நேற்று கன்னியாகுமரியில் தூய்மையே சேவை இயக்க உறுதி மொழி எடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. காந்தி மண்டபம் முன் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் திறந்த வெளி கழிப்பிடமே இல்லை. அனைத்து வீடுகளிலும் கழிப்பறை உள்ளது. இதனால் இங்கு திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவோர் இல்லை.
இதன்மூலம் தமிழகத்திலேயே திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத முதல் மாவட்டம் என்ற பெருமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது.