Feb 06 : குளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் இந்திய உச்சி மாநாட்டையொட்டி முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக ‘அசோசெம்’ மற்றும் சென்னை துறைமுகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு சென்னையில் Feb 05 நடைபெற்றது. மத்திய கப்பல் துறை துணை செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை துறைமுக தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் அசோசெம் தென்மண்டல வளர்ச்சி கவுன்சிலின் தலைவர் ரவீந்திர சன்னாரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் மூலம் சுமார் 6 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. குளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் பெற மத்திய அமைச்சரவைக்கு திட்டம் தொடர் பான ஆவணங்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. இத்திட்டம் நிறைவேற் றப்பட்டால் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களுக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும். இவ்வாறு பி.கிருஷ்ணமூர்த்தி கூறினார். கருத்தரங்கில் சென்னை துறை முக தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் பேசும்போது, இந்திய கடல்சார் உச்சி மாநாடு ஏப்ரல் 14 முதல் 16-ம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார். மாநாட்டில் 30 நாடுகள் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளன. கொரியா இம்மாநாட்டின் முக்கிய பங்கு உறுப்பினர் நாடாக இருக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்னையில் பல்வேறு இடங்களில் சாலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகம் மற்றும் கப்பல் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதன் மூலம் நம்நாட்டில் உள்ள துறைமுகங்கள் சர்வதேச தரத்துக்கு உயரும்’’ என்றார்.
BLOG COMMENTS POWERED BY DISQUS