நாகர்கோவில், அக். 17: நாகர்கோவிலில் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர் மற்றும் பிரமோஸ் விஞ்ஞானி பத்மபூஷன் டாக்டர். சிவதாணுபிள்ளை அவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.
இன்று இந்துக்கல்லூரியில் நடைபெறும் இப்பாராட்டு விழாவில் இந்துக்கல்லூரியின் முனைவர் எஸ்.பெருமாள் அவர்கள் வரவேற்புரை அளிக்கிறார். தலைவர் மற்றும் செயலர் ஆறுமுகம்பிள்ளை அவர்கள் தலைமையுரை வழங்குகிறார். ஏற்புரையை டாக்டர் சிவதாணுபிள்ளை அவர்கள் வழங்குகிறார். காலை 11.௦௦ மணி முதல் 11.30 வரை மாணவர்கள் சிறப்பு விருந்தினர் கலந்துரையாடல் நடக்கிறது. நன்றியுரையை செயலர் பெருமாள் பிள்ளை அவர்கள் வழங்குகிறார்.