கன்னியாகுமரி, அக்.05: கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்துக்கொடுத்தல் கூடாது என குமாரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்த்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
குமரி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகள் தத்தெடுத்தல் மற்றும் தத்துக்கொடுத்தல் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக கருதப்படும் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கும், குழந்தைகள் நலக்குழுவிற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் இயங்கி வரும் எந்த ஒரு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியிலும், குழந்தையை தத்துக்கொடுத்தல், சட்டத்திற்கு புறம்பாக நடைபெற கூடாது. குழந்தை தத்துக்கொடுத்தல் இளைஞர் நீதிச்சட்டம் 2015–ன் படி மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு வள நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படியே நடைபெற வேண்டும். எனவே ஆஸ்பத்திரிகளில், கைவிடப்பட்ட குழந்தைகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக குமரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
BLOG COMMENTS POWERED BY DISQUS