19
Sun, Nov
11 New Articles

குமரி மாவட்டத்தில் பறக்கும் படைகள்

Politics

கன்னியாகுமரி, மே 11: கன்னியாகுமரியில் மேலும் 117 பறக்கும் படைகள்  பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று முதல் இவர்கள் வாகன சோதனையில் ஈடுபடுகிறார்கள். 

 

தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் வருகிற 16–ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை அமைதியான முறையில் நடத்திட தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினரால் பரிசுப்பொருட்கள், பண பட்டுவாடா செய்யப்படாமல் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களில் இடம் பெற்றிருக்கும் போலீசாருடன், துணை ராணுவப் படையினரும் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 18 பறக்கும் படையினரும், 18 நிலையான கண்காணிப்புக்குழுவினரும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுடன் துணை ராணுவப்படையினரும் இணைந்து பணியாற்றுகிறார்கள். வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தற்போது பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களின் வாகன சோதனையும், கண்காணிப்பு பணிகளும் மேலும் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

நேற்று கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 தொகுதிகளிலும் பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்புக்குழுவினரும் துணை ராணுவப்படையினருடன் இணைந்து வாகன சோதனைகள் நடத்தினர். இதனால் 6 தொகுதிகளிலும் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சஜ்ஜன்சிங் சவான் உத்தரவின்பேரில் கூடுதலாக 117 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படையினர் இன்று (புதன்கிழமை) காலை முதல் மண்டலம் வாரியாக தங்களது வாகன சோதனைகளை தொடர உள்ளனர்.

மேலும் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் பெறப்படும் புகார்கள் மீது துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த மண்டல வாரியான பறக்கும் படையினரை ஈடுபடுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS