19
Thu, Oct
19 New Articles

வரலாற்று மாற்றம் ஏற்படுத்த வந்துள்ளோம் : சீமான்

Politics

மார்த்தாண்டம், ஏப்.: படித்தவர்கள் மாற்று அரசியலை சிந்திக்க வேண்டும் என சீமான் பேசினார்.

 

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மணிகண்டன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.

தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்காக பாடுபட்டவர்கள் ஏராளம். நம் மொழி சிதைந்தால் இனமும் அழியும். இன்று சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் தமிழை காக்கவும், தமிழ் தேசிய இனத்தை மறுகட்டமைப்பு செய்யவும் நமக்கு கடமை உள்ளது. இந்த கடமையை செய்யும் நாங்களும் புரட்சியாளர்கள்தான். 

வாழ்க்கையில் மாற்றம் செய்யவும், வரலாற்று மாற்றம் ஏற்படுத்தவும் நாங்கள் வந்துள்ளோம். வாக்கு கேட்டு நாங்கள் வரவில்லை. எதிர்கால மக்களின் வாழ்க்கைக்காக வந்துள்ளோம். அதற்காக இந்த தேர்தலை ஒரு களமாக பார்க்கிறோம்.

50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் மலிந்து கிடக்கும் ஊழலையும், லஞ்சத்தையும் தூக்கி எறிய உறுதியோடு வந்துள்ளோம். காமராஜர் நேர்மையாக, நியாயமாக ஊழற்ற ஆட்சி செய்தார். இப்போது உள்ள ஆட்சியில் ஊழல் மலிந்து உள்ளது. படித்தவர்களும், அறிவு உள்ளவர்களும் ஒரு மாற்று அரசியலை சிந்திக்க வேண்டும். இந்த தேர்தலை ஒரு அரசியல் புரட்சிக்கான களமாக பார்க்கிறோம்.

கூட்டத்தில், சீமானிடம் ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு பெற்றோர் கேட்டுக்கொண்டனர். அதன்படி அவர், அந்த குழந்தைக்கு ‘கயல்விழி’ என பெயர் சூட்டினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS