22
Mon, May
14 New Articles

கன்னியாகுமரியில், 24-ந் தேதி மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

Politics

சென்னை, ஏப்.19-மு.க.ஸ்டாலின், 24-ந் தேதி கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

 

மு.க.ஸ்டாலின் பிரசாரம்தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ந் தேதி தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரை மாவட்டத்தில் தொடங்கினார். தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி ஆகிய இடங்களில் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார்.இன்று(செவ்வாய்க்கிழமை) பெரம்பலூர், அரியலூர், கடலூர் (பொதுக்கூட்டம்-குன்னம்) ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காஞ்சீபுரத்தில் தனது முதற்கட்ட பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் நிறைவு செய்கிறார். இதையடுத்து 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை 23-ந் தேதி அவர் தொடங்குகிறார். அட்டவணைஇதுகுறித்து தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மு.க.ஸ்டாலின் 23-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, சென்னை ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.அதன் விவரம் வருமாறு:-23-ந் தேதி- திருவள்ளூர்.24-ந் தேதி- கன்னியாகுமரி, நெல்லை.25-ந் தேதி-தூத்துக்குடி.26-ந் தேதி- நெல்லை.27-ந் தேதி- கொளத்தூர்.28-ந் தேதி- சென்னை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS