23
Fri, Jun
10 New Articles

குமரி மாவட்டத்தில் வைகோ இன்று தேர்தல் பிரசாரம்

Politics

குமரி மாவட்டத்தில் வைகோ இன்று தேர்தல் பிரசாரம் மார்த்தாண்டத்தில் தொடங்கி சுசீந்திரத்தில் நிறைவு செய்கிறார்...

நாகர்கோவில், ஏப்.18- தே.மு.தி.க.-மக்கள்நல கூட்டணி-த.மா.கா வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று (திங்கட்கிழமை) குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். தேர்தல் பிரசாரம் சட்டசபை தேர்தலில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் நாகர்கோவில் மற்றும் குளச்சல் தொகுதிகளில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. கன்னியாகுமரி, பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. கிள்ளியூர் தொகுதியில் த.மா.கா.வும், விளவங்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பிரசாரம் செய்து விட்டார். இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று (திங்கட்கிழமை) பிரசாரம் செய்கிறார். அவர் இன்று மாலை 4 மணிக்கு மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் பேசுகிறார். சுசீந்திரத்தில்... பின்னர் மாலை 5 மணிக்கு கருங்கலிலும், 5.30 மணிக்கு குளச்சலிலும், 6 மணிக்கு திங்கள்நகரிலும், இரவு 7 மணிக்கு அழகியமண்டபம் சந்திப்பிலும், 8 மணிக்கு நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பிலும், 9 மணிக்கு சுசீந்திரத்தில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இந்த தகவல்களை குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வக்கீல் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். பிரசார நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS