23
Fri, Jun
10 New Articles

தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான்

Politics

நாகர்கோவில், ஏப். 06: நாகர்கோவிலில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் சஜ்ஜன்சிங் தொடங்கி வைத்தார். 

 

தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் வருகிற மே மாதம் 16–ந் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு குமரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சஜ்ஜன்சிங் சவான் குமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு பேரணி, மனிதசங்கிலி, கையெழுத்து இயக்கம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். 

இந்தநிலையில் நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம் நேற்று காலை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு தொடங்கியது. இதனை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் 

இதைத் தொடர்ந்து கலெக்டர் சஜ்ஜன்சிங் பேசியதாவது, 

கடந்த சட்டசபை பொதுத்தேர்தலின்போது வாக்குப்பதிவு குறைவான பகுதிகளில் உள்ள வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பேரணிகள், மனித சங்கிலிகள், கல்லூரி மாணவ– மாணவிகளிடையே கலந்துரையாடல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுவரொட்டிகள், பேனர்கள், பலூன்கள் ஆகியவற்றின் மூலம் வாக்குப்பதிவு நாளான வருகிற மே மாதம் 16–ந் தேதி வாக்காளர்களுக்கு நினைவூட்டப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று நடந்த மினி மாரத்தானில் ஸ்காட் கிறிஸ்தவ உடற்கல்வியியல் கல்லூரி, ஹோலிகிராஸ் கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி, விளையாட்டு விடுதி வீரர்கள் என 200–க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டம் மணிமேடை சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம், கோட்டார், செட்டிகுளம் வழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. மினி மாரத்தானில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாக்குப்பதிவு நாளை நினைவு கூறும் வகையில் மே 16 என்ற ஸ்டிக்கரை டி–சர்ட்டில் ஒட்டியிருந்தனர்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS