29
Wed, Mar
29 New Articles

சுசீந்திரத்தில் பழையாற்றின் குறுக்கே புதிய பாலம்

Politics

பிப் 05/ 2016 சுசீந்திரத்தில் பழையாற்றின் குறுக்கே தொடங்கப்பட்டுள்ள புதிய பாலத்திற்கானப் பணிகளை இன்று காலை பார்வையிட்ட போது.

 

இந்தியாவின் தென்கோடிப் பகுதியான கன்னியாகுமரியை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் மிக முக்கியமான பாலம் சுசீந்திரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பாலம் 1935ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் ஜார்ஜ் பிலிப் என்ற ஆங்கிலேயப் பொறியாளரால் பழையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது.

80 ஆண்டு பழைமையான இந்தப் பாலம் அன்றைய வாகனப் போக்குவரத்துக்கு போதுமானதாக இருந்தது. இப்போது பல மடங்கு வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில் இந்தப் பாலத்தை கடந்து செல்ல கடந்த 20 ஆண்டுகளாக நெடுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இங்கு பெரிய அளவிலான புதிய பாலம் வேண்டுமென பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எடுத்து வந்த துரித நடவடிக்கையின் விளைவாக, குமரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவு நனவாகும் விதத்தில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் சுசீந்திரத்தில் விரிவான புதிய பாலத்துக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாலம் கட்டும் பணிக்கு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டினார்.

 

Jackson Steve

BLOG COMMENTS POWERED BY DISQUS