24
Sun, Sep
8 New Articles

குமரியை சுற்றுலா மாவட்டமாக அறிவிக்க தீவிரம்

Politics

நாகர்கோவில், ஜன.8: குமரியில் இருகடற்கரை சாலைகள், 14வகையான காடுகள், ஐவகை நிலங்கள் என சொர்க்கபுரியாக இருந்தாலும் இங்குள்ள சுற்றுலா பகுதிகள் பல அழிந்துவிட் டன.

சில அழிவின் பிடியில் உள்ளன. அனைத்து வளங்களும் இருந்தும் முறையான ஒருங்கிணைப்பு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள், தங்கும் வசதி, போக்குவரத்து வசதி போன்றவை இல்லாமல் உள்ளன.

இந்நிலையில் பிரதமர் நரேந் தி ர மோடி தமிழ கத் தில் கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத் தின் போது, அவர் பிர சா ரம் செய்த பகுதிகளுக்கு ஏற்ப தொழில் துறை முன்னேற்றம் காணநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவாக்குறுதி அளித்திருந் தார். கன்னியாகுமரியில் அவர் பேசிய போது, குமரியை சுற்றுலா மாவட்டமாக மாற்றுவேன் என வாக் குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்தவாக்குறுதியை நிறை வேற்றும் வகை யில் மத் திய சுற்றுலாத் துறை மற்றும் கலாச்சாரத் துறை அமைச் சர் மகேஷ் சர்மா 9ம் தேதி முதல் இரு நாட் கள் ஆய்வு மேற் கொள்ள உள் ளார்.

 

 இதன் படி முதல் நாள் காலை திருவனந்தபுரத்தில் இருந்து காரில் வரும் அவர் களியக்காவிளை வழியாக மதியம் 3 மணிக்கு சித றால் ஜெயின் கோயிலை பார்வையிடுகி றார். தொடர்ந்து திற்பரப்பு அருவி, பேச்சிப்பாறை அணை, மாத் தூர் தொட்டி பாலம், காளிகேசம், உலக்கை அருவி, பறக்கை குளம், மருந்துவாழ் மலை, சாமித் தோப்பு, வட் டக் கோட்டை ஆகிய இடங் களை பார்வையிடுகி றார். பின்னர் கன்னியாகுமரியில் இரவு தங்குகிறார்.

 

10ம்தேதி காலை 9.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் அவர் விவேகானந்தா கேந் திரா, திரிவேணி சங்கமம், விவேகானந்தர் நினைவு பாறை, சொத் த விளை கடற் கரை, சங் கு துறை கடற் கரை, திற் ப ரப்பு அருவி, முட் டம் கடற் கரை, மணவாளக் குறிச்சி ஆகிய இடங் களை பார்வையிடுகி றார். பின் னர் அங்கு மதி யம் 12.50 மணிக்கு மதிய உணவை முடித் துக் கொண்டு, 1.15 மணிக்கு குளச் சல் விக்டரி நினைவு தூணை பார்வையிடுகிறார். இரணியல் கோட்டை, புலியூர்குறிச்சி, தேங்காய் பட் டி ணம் கடற் கரை போன்ற இடங் களை பார் வை யிட்டு விட்டு திருவனந் த தபு ரம் வழியாக டெல்லி செல் கி றார்.

 

இந்த ஆய்வின் போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய சுற்றுலாத் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS