06
Mon, Feb
0 New Articles

Top Stories

நாகர்கோவில், அக்.03: நாகர்கோவில் நகராட்சி பகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள் 12–ந் தேதிக்குள் தயாராகிவிடும் என்று நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தெரிவித்தார்.

குமரி மாவட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி, மே 11: கன்னியாகுமரியில் மேலும் 117 பறக்கும் படைகள்  பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று முதல் இவர்கள் வாகன சோதனையில் ஈடுபடுகிறார்கள். 

தக்கலை, ஏப்.:  அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் 2-வது மற்றும் 3-வது இடத்துக்கு சண்டை நடக்கிறது. அதனால் தே.மு.தி.க., த.மா.க., மக்கள் நல கூட்டணிக்குத்தான் முதலிடம் என்று தக்கலை பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார். 

சட்டசபை தேர்தலில் குமரி மாவட்டத்தில் தே.மு.தி.க.-மக்கள்நல கூட்டணி மற்றும் த.மா.கா. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று குமரி மாவட்டம் வந்தார். தக்கலை பழைய பஸ் நிலையம் பகுதியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. 

இதில் பங்கேற்ற  விஜயகாந்த் கூறியதாவது :-

நான் அ.தி.மு.க.வையும், தி.மு.க.வையும் புரட்டிப்போடும் மாஸ்டர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொன்னார்களாம், காங்கிரசும், த.மா.கா.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று. அப்போ அ.தி.மு.க. எதில் இருந்து வந்தது? தி.மு.க.வில் இருந்து வந்தது. அப்படியானால் நீங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே. புதுச்சேரியில் மாற்றம் வரவேண்டும் என்று ஜெயலலிதா சொல்கிறார். அதே மாற்றம் தமிழ்நாட்டிலும் வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தி.மு.க. 2-வது இடத்துக்குத்தான் வரும் என்று அ.தி.மு.க. சொல்கிறது. அ.தி.மு.க.வுக்கு 3-வது இடம் என்று தி.மு.க. சொல்கிறது. அவர்களுக்கு 2-வது, 3-வது இடத்துக்குத்தான் சண்டை. முதலிடம் தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி-த.மா.கா.வுக்குத்தான். 

தேர்தல் நிலவரம் பற்றி வெளியிடப்பட்டது கருத்துக்கணிப்பு அல்ல. அது கருத்து திணிப்பு. யாருக்கு வாய்ப்பு என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். 

குமரி மாவட்டம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம். இங்கு சாலைகள் தரமானதாக இல்லை. அரசு பஸ்கள் ஒன்றுக்குப்பின் ஒன்று வரிசையாக நிற்கின்றன. அனைத்தும் பிரேக் டவுன். ஒரு பெண் பஸ்சின் ஓட்டை வழியாக ரோட்டில் விழுந்து விட்டார். அந்த அளவுக்கு மோசமான ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி உள்ளது. 

விஜயகாந்துக்கு பேச தெரியவில்லை என்று எழுதுகின்றனர். நான் நன்றாகத்தானே பேசுகிறேன். ஆங்கிலத்தில் பேசினால் கூட புரியவில்லை என்று சொல்லலாம். தமிழில் தானே பேசுகிறேன். இதுகூடவா புரியவில்லை. விஜயகாந்துக்கு தொண்டையில் இன்பெக்ஷன் என்கிறார்கள். எத்தனை கூட்டங்களில், எத்தனை இடங்களில் பேசியிருப்பேன். ஜெயலலிதா, கருணாநிதி இவர்களைத் தவிர வேறு யாரும் வரக்கூடாதா? 

மின்சாரத்துறையில் 25 ஆயிரம் கோடி ஊழல் என்கிறார்கள். அந்த துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை நான் ஸ்லோ விஸ்வநாதன் என்று தான் கூப்பிடுவேன். நத்தை ஸ்லோவாகத்தான் போகும். சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி ரப்பர் ஸ்டாம்பு போன்றது. 

இந்த தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போர். வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் விஜயகாந்த் மக்களுக்காக வாழ்ந்தான் என்று இருக்க வேண்டும். மதுவிலக்கு படிப்படியாக குறைக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதைத்தானே 6 மாதத்துக்கு முன்பு நாங்கள் கேட்டோம். மது விஷயங்களில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டுக்களவாணிகள். கருணாநிதி இந்த விஜயகாந்தை பிடிக்கப் பார்த்தார். கழுவுற மீனில் நழுவுகிற மீன்போல நான் நழுவி வந்து விட்டேன். பணத்தை கொடுத்து விஜயகாந்தை வாங்க முடியாது. கேரளாவில் ரூ.1 கோடி, ரூ.2 கோடி ஊழல் என்றாலே பிரச்சினையை கிளப்புகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ரூ.5 ஆயிரம் கோடி, ரூ.25 ஆயிரம் கோடியெல்லாம் எளிதாகி விட்டது. 

இவ்வாறு விஜயகாந்த் பேசினார். 

 

மார்த்தாண்டம், ஏப்.: படித்தவர்கள் மாற்று அரசியலை சிந்திக்க வேண்டும் என சீமான் பேசினார்.

கன்னியாகுமரி, ஏப்.: குமரி மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

கன்னியாகுமரி, அக்.05: கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்துக்கொடுத்தல் கூடாது என குமாரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி, அக்.02: கன்னியாகுமரி கடற்கரையில் குட்டி விமானம் மூலம் படம் பிடித்து வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில், மே 22: நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற பள்ளி வாகனங்கள் ஆய்வில் 10 வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

The paper deals with enumeration of medicinally important weeds frequently used by local communities of Kanyakumari district, Tamil Nadu. A total of 93 medicinal weedy species from 85 genera used in traditional medicines were identified. Majority of species are used for curing skin diseases, fever, cold and cough, etc. Of 42 families, 20 families were monospecific. Plants of family Fabaceae was largely represented (7 species) family followed by Asteraceae, Lamiaceae and Euphorbiaceae.

நாகர்கோவில், ஜன. 25: நாகர்கோவிலில் குசந்தைகள் திரைப்பட விழா வரும் ஜனவரி 28 ம் தேதி தொடங்க இருப்பதாக கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார். 

குமரி மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி பேரூராட்சி மற்றும் முழு சுகாதார இயக்கம் ஆகியவை சார்பில் நேற்று கன்னியாகுமரியில் தூய்மையே சேவை இயக்க உறுதி மொழி எடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. காந்தி மண்டபம் முன் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் திறந்த வெளி கழிப்பிடமே இல்லை. அனைத்து வீடுகளிலும் கழிப்பறை உள்ளது. இதனால் இங்கு திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவோர் இல்லை.

இதன்மூலம் தமிழகத்திலேயே திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத முதல் மாவட்டம் என்ற பெருமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது.

கன்னியாகுமரி, நவ.16: குமரி மாவட்டத்தில் தபால்துறை சார்பில் நடமாடும் பணப்பரிமாற்ற சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பணம் பெறவும் முடியும், டெபாசிட்டும் செய்யலாம்.

நாகர்கோவில், நவ.13: குமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் பணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், மத்திய மந்திரி நிதின்கட்காரி தொடங்கி வைத்தார்.

குமரி மாவட்ட வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பணத்தை மாற்றுவதற்காக கூட்டம் அலைமோதியது. ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பப்பட்ட பணமும் விரைவில் தீர்ந்தன.

நாகர்கோவில், அக்.18:  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்கள் நலக்கூட்டணி கட்சிகளை சேர்ந்த 115 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுசீந்திரம், மே 03:  சுசீந்திரத்தில் இருந்து ஈத்தங்காடுக்கு ரூ.24½ கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை ஒன்றரை ஆண்டு காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.