29
Wed, Mar
29 New Articles

குமரி மாவட்ட நாற்கரச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி

Taluk Panchayat

கன்னியாகுமரி, மே 04: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வரும் நாற்கர சாலை திட்டத்துக்கான பொதுக்குழு ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்து முடிந்தது.  இந்தக் கூட்டத்தில் நாற்கரச் சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பனி மே 31 இறுதிக்குள் நடத்தி முடித்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொன்.இராதாக்கிருஷ்ணன் கூறியதாவது:

 குமரி மாவட்டத்தில் இதுவரை நாற்கரச் சாலைக்காக 89 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்கள் இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் கையகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, 2009 ஆம் ஆண்டு தமிழக அரசின் நிர்ணயப்படி இழப்பீடு வழங்கப்பட்டது. இனி இந்தத் தொகை தமிழக அரசின் 2012 ஆண்டிற்கான நிர்ணயப்படி வழங்கப்படும்.

இதனால், நிலம் வழங்கியவர்களுக்கு 8 மடங்கு வரை இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். இதன்படி ரூ. 57.44 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த இழப்பீட்டுத் தொகை, புதிய கணக்கீட்டின் படி ரூ. 373 கோடியாக அதிகரித்துள்ளது.

மீண்டும் விண்ணப்பிக்கலாம்: நாற்கரச் சாலைக்காக நிலத்திற்கு முந்தைய மதிப்பீட்டின் படி இழப்பீடு பெற்றவர்கள் தகுந்த ஆவணங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால், அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகை நீங்கலாக தற்போதைய மதிப்பீட்டின்படி இழப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

குமரியில் மோசமான நிலையில் உள்ள 44 சாலைகளைப் பராமரிக்க மத்திய அரசு ரூ. 99.80 கோடி நிதியை வழங்கியுள்ளது என்றார் அவர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS