தேவையான பொருட்கள் : அரிசி - 1 கப்,துவரம் பருப்பு - 1/2 கப்,கத்திரிக்காய் - 1 சதுரமாக வெட்டியது
,வாழைக்காய் - 1 தோல் நீக்கி சதுரமாக வெட்டியது, முருங்கைகாய் - 1/2 கப், தடியங்காய்(winter melon) - 1/2 கப் (தோல் நீக்கி விதை நீக்கி சதுரமாக வெட்டியது, சீனரைக்காய் (cluster beans) - 10 எண்ணிக்கை( 2 துண்டாக வெட்டியது),வெள்ளிரிக்காய் - 1 கப் (தோல் விதை நீக்கி சதுரமாக வெட்டியது), சேனை (Elephant foot Yam/Suran) - தோல் நீக்கி சதுரமாக் வெட்டியது,மாங்காய் - 1/4 கப் சிறிய துண்டுகளாக வெட்டியது,சின்ன உள்ளி(Pearl Onions) - 8,முருங்கைக்கீரை - 2 கப்
மற்றவை : மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன் ,கொத்தமில்லி தூள் - 1/2 ஸ்பூன்,மஞ்சள் - 1/4 ஸ்பூன் , காயம்(Asafoetida) - 1/4 ஸ்பூன் , கறிவேப்பிலை 5 இலை,புளி - ஒரு நெல்லிக்காய் அளவு , பொரித்த பப்படம் 2 எண்ணிக்கை
தாளிப்பதற்கு : கடுகு- 1/2 ஸ்பூன், வெந்தயம் - 1/4 ஸ்பூன், சீரகம் - 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை 5 இலை,
அரைப்பதற்கு: தேங்காய் - 5 மேஜைக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் 14 தேக்கரண்டி, சின்ன உள்ளி - 2 எண்ணிக்கை,
செய்முறை : ஒரு அடிபிடிக்காத பானை எடுத்து அதில் 2 கப் தண்ணீர் விட்டு துவரம்பருப்பை கழுவி அந்த தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.. பாதி வெந்ததும் அதில் கழுவிய அரிசியை போ ்டு 2 கப் தண்ணீஈர் விடவும். அடி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். அடிக்கடி கிண்டி கொடுக்கவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் அனைத்து காய்கறி மற்றும் உள்ளி, புளிக்கரைசல், மிளகாய்பொடி, கொத்தமல்லி போடி, மஞ்சள் பொடி, காயம் தேவையான உப்பு , கறிவேப்பிலை போட்டு தீயை மிதமாக வைக்கவும். இந்தநேரத்தில் அதிகமாக அடிபிடிக்கும். தேவையானால் சிறிது தண்ணீர் விட்டு கொள்ளலாம். காய்கறி அரிசி எல்லாம் வெந்து வரும் சமயம் தனியாக ஒரு சட்டியில் எண்ணை விட்டு முருங்கைக்கீரையை போட்டு நன்கு வசக்கி சோற்றில கலக்க வேண்டும். அரைப்பதற்கு என குறிப்பிட்டுள்ளவற்றை நன்கு அதே நேரத்தில் நைசாக இல்லாமல் திருதிருவென்று அரைக்க வேண்டும். இதை கூட்டஞ்சோறில் கலந்து கொதிக்க விட வேண்டும். இப்போது காய்கறி, அரிசி எல்லாம் சரியான பதத்துக்கு வெந்ததும் உப்பு எரிப்பு சரிபார்த்து இறக்கி வைக்கவும். இப்போது தனியாக ஒரு சிறிய சட்டியில் எண்ணை விட்டு வடகத்தை போட்டு தாளித்து கூட்டன்சோறில் போடவும். பின்பு அதே எண்ணையில் கடுகு போட்டு பொ
BLOG COMMENTS POWERED BY DISQUS