புளிசேரி

Lunch

தேவையான பொருட்கள்:  தேங்காய் - 5 மேஜைக்கரண்டி, பச்சைமிளகாய் - 2,

சீரகம்- 1 தேக்கரண்டி, பூண்டு - 1 பல், மஞ்சள் - 1/4 தேக்கரண்டி , உப்பு- தேவையான அளவு.

மற்றவை;  தயிர் 1 கப், தண்ணீர் - 1 கப்  தயிருக்குப்பதில்  மோராக இருநதால் - 2 கப் .

தாளிப்பதற்கு : எண்ணைய் - 3 தேக்கரண்டி,  கடுகு - 1 தேக்கரண்டி,  வெந்தயம் - 1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை- 5 இலை, குட்டித்தக்காளி (மணத்தக்காளி)  - 1 மேசைக்கரண்டி . 

செய்முறை :  முதலில் அரைப்பதற்க்கு தேவையான பொருட்கள் பகுதியில் உள்ள தேங்காய்  முதல் மஞ்சள் வரையிலான பொருட்களை மக்சியில் எடுத்து நல்ல மைய அரைக்க வேண்டும். அறைத்த பின்பு  ஒரு சட்டியில் ஒரு கப் தண்ணீர் விட்டு அரைத்ததை போட்டு நல்ல கொதிக்க வைக்க வேண்டும். அரைத்த விழுதில் உள்ள பச்சை வாசனை போக வேண்டும் சுமார் 8 ல்லிருந்து  10 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து முடித்ததும் அடுப்பை அணைத்து  தயிர் அல்லது மோரை  நன்கு அடித்துக  கலக்கி  5 நிமிடம் கழித்து கொதித்து முடித்த தேங்காயில் விட வேண்டும். இப்போது தேவையான அளவு உப்பு போட்டு சரிபார்க்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் கொஞ்சம் விட்டுக்கொள்ளலாம். இபோது தனியாக ஒரு சட்டியை எடுத்து   3 தேக்கரண்டி எண்ணை விட்டு காய்ந்ததும் மணத்தக்காளியை  போட்டு நன்கு பொரியவேண்டும் கரிய கூடாது. பொரிந்ததும் மணத்தக்காளியை மட்டும் வடித்து தேங்காய் தயிர் கலவையில் போட வேண்டும். பின்பு அதே  எண்ணையில் .கடுகு போட்டு பொரிந்ததும் வெந்தயம் போட்டு  பொரிந்ததும் கறிவேப்பிலை போட்டு  தீயை  அணைத்து  தேங்கே தயிர் கலைவையில் விட வேண்டும்.. இப்போது புளிசேரி தயார்.   இந்த கறியை சாதத்துடன் கலந்து தொட்டுக்கொள்ள காரசாரமான மீன்  பொரியல் அல்லது  சிக்கன் சாப்ஸ், அல்லது உருளைக்கிழங்கு வறுவல் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். 

BLOG COMMENTS POWERED BY DISQUS