தேவையான பொருட்கள் :
தடியங்காய் (winter melon) 2 கப், தட்டைப்பயறு/பெறும்பயறு - 1 கப், கட்டிதேங்காய்ப்பால் - 1/2 கப் , உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு :
தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி, பச்சைமிளகாய் - 4, கறிவேப்பிலை - 5 எண்ணிக்கை
செய்முறை :
குக்கரில் பயறு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். பயறு நன்கு வெந்து இருக்க வேண்டும். ஆனால் அதன் வடிவம் போகக்கூடாது. பயறு வடிவம் முழுதாக இருந்தால் நன்றாக இருக்கும். வேகவைத்து எடுத்து கொள்ளவும். தடியங்க்காவை மிதமான சதுரத்தில் வெட்டி தோல் நீக்கி கழுவி தனியாக எடுத்து வைக்கவும்
ஒரு அடிகனமான பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து தீயை மிதமாக வைக்கவும் சட்டி காய்ந்ததும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் உ.பருப்பு போட்டு காய்ந்ததும் பச்சைமிளகாவை போட்டு வதக்கவும் கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் எடுத்துவைத்த தடியங்காவை போட்டு தாளிக்கவும் இப்போது தீயை கூட்டிக்கொள்ளலாம். ஒரு 5 நிமிடம் வதக்கவும். பின்பு முழ்கும் அளவிற்கு தண்ணீர்விட்டு வேகவைக்கவும். வெந்ததும், வேகவைத்த பயறை தடியங்காவுடன் கொட்டி 5 நிமிடம் கொதிக்கவிடவும். உப்பு போட்டு சரிபார்க்கவும் தண்ணீர் நிறையவும் இருக்ககூடாது அதற்காக கட்டியாகவும் இருக்ககூடாது பின்பு தேங்காய்ப்பாலை விட்டு ஒரு கொதி வரும் வரை விட்டு தீயை அணைத்து விடவும். இப்போது ஓலன் தயார். இதை சாதத்தில் விட்டும சாப்பிடலாம் அல்லது சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம்.
BLOG COMMENTS POWERED BY DISQUS