23
Fri, Jun
10 New Articles

தேங்காய்த் துவையல்

Breakfast

சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பருப்புக் கூட்டு, பொரித்த அப்பளம், வடாம் வகைகளுடன் சேரும். 

 

தயிர் சாதம், உப்புமா, தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம். நீண்ட பயணங்களுக்குத் தயாரிக்கும்போது, தேங்காயையும் நன்கு சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளலாம். கெடாமல் இருக்கும். 

தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் - 1 கப், பச்சைமிளகாய் - 2,  புளி - 1/4 நெல்லிக்காய் அளவு,  பூண்டு - 1,  கறிவேப்பிலை - 5 எண்ணிக்கை, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 3 மேஜைக்கரண்டி. 

செய்முறை: தேவையான பொருட்களின் கீழ் உள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு அரைக்கவும். நைசாக அரைக்கக் கூடாது. அதற்க்கு முன்னாடியே எடுத்து விட வேண்டும். இந்த துவையல் இட்லி, தோசை, அடை, வடை, கூழ் தோசை, ஆகியவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.     

BLOG COMMENTS POWERED BY DISQUS