Puli/pooli curry is a mixed vegetable curry that is spicy, delicious with a hint of sourness
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு: தேங்காய் துருவியது - 1 கப், காய்ந்த மிளகாய் 2, மிளகு 1/4 டீஸ்பூன், சின்ன உள்ளி(pearl onion) 3, மஞ்சள் 1/4 டீஸ்பூன்,
மற்றவை:
புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு, காய்கறி இவற்றில் ஏதேனும் ஒன்று(கத்தரிக்காய் 2 , முருங்கைக்காய் 1, தடியங்காய்(winter melon) கால்துண்டு, வெள்ளரிக்காய் 1/2 ).
தாளிப்பதற்கு:
எண்ணெய் 2 டீஸ்பூன், கடுகு 1/4 டீஸ்பூன், வெந்தயம் 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை 5 எண்ணிக்கை, பொடியாக நறுக்கிய சின்ன உள்ளி 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் மேலே குறிப்பிட்டவற்றில் உங்களுக்கு விருப்பமான எதேனும் ஒன்றை (கத்தரிக்காய் கன சதுர வடிவில் வெட்டவும், முருங்கைக்காய் சுண்டு விரல் நீளத்திற்க்கு வெட்டவும், தடியங்காய் தோல் மற்றும் விதை நீக்கி கன சதுர வடிவில் வெட்டவும், வெள்ளரிக்காய் விதை மட்டும் நீக்கி கன சதுர வடிவில் வெட்டவும்) வெட்டி கழுவி 2 கப் தண்ணீரில் வேகவிடவும். காய்கறி வேகும் நேரத்தில் அரைப்பதற்க்கு கீழே உள்ள பொருட்களை(தேங்காய், கா.மிளகாய், மிளகு, சின்ன உள்ளி, மஞ்சள்) தண்ணீர் விட்டு நல்ல மைய அரைக்கவும். காய்கறி முக்கால் பாகம் வெந்தவுடன் தீயை நல்ல குறைத்துவிட்டு அரைத்த தேங்காய் விழுது, புளி கரைசல் மற்றும் உப்பு சேர்த்து ருசி பார்க்கவும். காரம் குறைவாக இருந்தால் கொஞ்சம் மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளலாம். காரம், உப்பு, புளி மூன்றும் சரியாக இருந்தால் தீயை கூட்டி வைத்து 15 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து முடித்தவுடன் கீழே இறக்கி வைத்துவிட்டு அதே அடுப்பில் எண்ணெய் கடுகு தாளிப்பதற்க்கு ஏற்ப்ப ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு போட்டு பொரிந்தவுடன் வெந்தயம் சேர்த்து நிறம் மாறியதும் கறிவேப்பிலை சேர்த்து வசங்கியதும் நறுக்கிய சின்ன உள்ளியை சேர்த்து வசக்கவும். சின்ன உள்ளியை நல்ல சிவக்க வறுத்தால் குழம்பு நல்ல மணமாக இருக்கும். நல்ல சிவக்க வசங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு குழம்பில் வசங்கியதை சேர்த்து ஒரு 5 நிமிடம் வைத்திருந்துவிட்டு பரிமாறவும். சாதத்திற்கு ஏற்ற குழம்பு. எல்லா வகையான காய்கறி கூட்டு மற்றும் அசைவ சைட்டிஷ்களுக்கும் ஏற்ற குழம்பு.
குறிப்பு: வெண்டைக்காய் புளிக்காரியும் வைக்கலாம். அப்படி வைப்பதாக இருந்தால் குழம்பு வைக்கும் பாத்திரத்தில் புளியை நன்கு கரைத்து உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து கொண்டிருக்கும் பொழுது பாதி சுண்டுவிரல் நீளத்திற்கு வெட்டிய வெண்டைக்காயை சேர்த்து வேக வைக்கவும்.
BLOG COMMENTS POWERED BY DISQUS