தேவையான பொருட்கள்: சக்கா (Jack fruit) (பொடியாக வெட்டியது) - 2 கப், சர்க்கரை - 3/4 கப்,
ஏலக்காய்ப்பொடி - 1/4 தேக்கரண்டி, நெய் - 4 மேஜைக்கரண்டி.
செய்முறை,:
சக்கா வரட்டிக்கு கூளஞ்சக்கா அல்லது வறுக்கன்சக்கா பயன்படுத்தலாம். கூழஞ்சக்காவாக இருந்தால் அடிக்கனமான பாத்திரத்தில் அப்படியே வேகவைக்கவும். வறுக்கன்சக்காவாக இருந்தால் குக்கரில் முழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு 5 அல்லது 6 விசில் வைத்து எடுக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் துருவிய சர்க்கரையை போட்டு 2 மேஜைக்கரண்டி தண்ணிர் விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு அதை இறுத்து வைக்கவும். தேயிலை அரிப்பில் அல்லது துணியில் இறுக்கலாம். இதை வேகவைத்த சக்கா உடன் சேர்த்து நல்ல கிண்டவும் தண்ணீர் நல்ல வற்றி வரும் சமயம் 2 மேஜைக்கரண்டி நெய் விடவும். தீயை மிதமாக வைத்து கவனமாக கிண்டவும். தண்ணீர் மூழுவதும் வற்றி வரும் பொழுது மிச்சம் உள்ள நெய்யையும் விட்டு நல்ல கிண்டவும் இப்போது பாத்திரத்தில் அடிப்பிடிக்காமல் கிண்ட வரும். தேவைக்கேற்ப சர்க்கரையும் நெய்யும் கூட கொஞ்சம் விடலாம். சட்டியில் ஒட்டாமல் கிண்ட வருவது தான் சரியான பதம். அதுவரை கிண்ட வேண்டும். இதற்கு எப்படியும் 15 ல் இருந்து 20 நிமிடம் ஆகும். சட்டியில் ஒட்டாமல் வர ஆரம்பித்தபிறகும் 5 ல் இருந்து 8 நிமிடம் வரை கிண்டவும். இறக்குவதற்கு 2 நிமிடம் முன்பு ஏலக்காய்பொடி போட்டு கிண்டி இறக்கவும். பதம் வரும் முன்னரே எடுத்து விட்டால் சுவை குறைவாக இருக்கும், விரைவில் கெட்டுவிடும். நெய் இன்னும் கொஞ்சம் விட்டால் சுவை அதிகரிக்கும்.
BLOG COMMENTS POWERED BY DISQUS