ஆரியக் கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா இரு… க்கிற பழமொழியை தனுஷ்தான் கரெக்டா ஃபாலோ பண்றாருன்னு தோணுது.
தமிழ், இந்தி, மலையாளம்னு ரவுண்டு கட்டினாலும் தன் வேலைகள் மற்றும் தன் பக்தியில அவரை அடிச்சுக்க ஆள் கிடையாது.
இருக்கிற பிசி ஷெட்யூல்ல தன் மகனோட சபரிமலைக்கும் போய் ஐயப்பனை தரிசனம் பண்ணிட்டு வந்துட்ட தனுஷ் நேரா நாகர்கோயில் போயிட்டார்.
அங்கே பரத்பாலாவோட மரியான் இறுதி ஷெட்யூல் நடக்குது. இந்த ஷெட்யூல் முடிஞ்சா போஸ்ட் புரடக்ஷனுக்கு உட்கார வேண்டியதுதான்.
அடுத்து ராஞ்ச்சன் இந்திப்படம், அதுக்குப்பிறகு வெற்றிமாறன் படம், பிறகு சொட்டவாளக்குட்டின்னு அடுத்த வருஷம் அவருக்கு தொடருது.
மரியான்ல அவரோட பார்வதி மேனன் ஜோடி சேர்ந்தாலும் அவரோட பெரிய சர்ப்ரைஸ், படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் றது.
இசைப்புயல்ல இந்த தடவை தனுஷும் சிக்கிட்டார்..!