25
Sat, Mar
29 New Articles

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை : கலெக்டர்

Entertainment

கன்னியாகுமரி, ஏப். 26: குமரி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலித்தால், அதுபற்றி பொதுமக்கள் புகார் செய்யலாம் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

இது தொடர்பாக கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திரையரங்குகளில் அரசு விதிமுறைகள் மீறப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, குமரி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் புகார் செய்யலாம். 

கலெக்டர் அலுவலகத்தில் 04652-279090 என்ற எண்ணில் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடமும் (பொது), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 04652-279833 என்ற எண்ணில் வருவாய் கோட்டாட்சியரிடமும், பத்மநாபபுரத்தில் 04651-250722 என்ற எண்ணில் பத்மநாபபுரம் உதவி கலெக்டரிடமும் புகார் அளிக்கலாம். 

இவ்வாறு அந்த அறிவிப்பில் கலெக்டர் கூறியுள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS