கொட்டாரம், ஜன. 31: கிறிஸ்தவ ஆலயம் கட்ட விதித்த தடையை கண்டித்து கொட்டாரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் அச்சன்குளம் பகுதியில் பழமையான சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை புதுப்பித்து கட்ட ஆலய நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். எனவே அவர்கள் ஆலயத்தின் அருகே உள்ள நிலத்தை வாங்கி அதில் ஏற்கனவே இருந்த ஆலயத்தை மாற்றி கட்ட ஏற்பாடு செய்தனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து தடை விதித்தது.
கிறிஸ்தவ ஆலயம் கட்ட மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததற்கு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஜனநாயக கிறிஸ்தவ பேரவையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நேற்று அச்சன்குளத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன் படி நேற்று காலை 10 மணிக்கு அச்சன்குளம் சி.எஸ்.ஐ. ஆலயம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஜார்ஜ் பொன்னையா தலைமை தாங்கினார். ஜனநாயக கிறிஸ்தவ பேரவை தலைவர் ஏசுராஜ், ஐக்கிய கிறிஸ்தவ பேரவை தலைவர் ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
500–க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கொட்டாரம், ஜன. 31: கிறிஸ்தவ ஆலயம் கட்ட விதித்த தடையை கண்டித்து கொட்டாரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.