24
Sun, Sep
8 New Articles

பகவதி அம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது

Hindu

மமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

 

கன்னியாகுமரி, பிப்.27: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்துப் பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. இது பெண்களின் சபரி மலை என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடைவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  10 நாட்கள் வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். 

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி மார்ச் 7-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, கணபதிஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணி முதல் 8 மணிக்குள் திருக்கோடி புதிதாக பிரதிஷடை செய்யப்பட்டுள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. 

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைசர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜாக மாநில தலைவர் தமிழிசை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சமய மாநாடு திடலில் இந்து சேவா சங்கம் சார்பில் 80வது சமய மாநாடு கொடியேற்றம் மற்றும் சமய மாநாடு துவங்கியது. 

2ம் நாள் முதல் 9ம் நாள் வரை தினமும் காலை 4:30 மணிக்கு திருநடை திறப்பு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6:30 மணிக்கு தீபாராதனை, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6:30 மணிக்கு சாய்ராட்சை தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாழப்பூஜை, 3ம் நாள் முதல் 9ம் நாள் வரை தினமும் காலை மற்றும் இரவு 9:30 மணியளவில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி நடக்கிறது. 

. இதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) ஆனந்த குமார் சோமானி நேற்று மண்டைக்காடு வந்தார்.

அங்கு கோவில் வளாகத்தில் பொங்கலிடும் இடம் மற்றும் கோவில் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாய், கடற்கரை, கடற்கரை சாலை, மண்டைக்காடு சந்திப்பு, தற்காலிக பஸ் நிலையம் போன்ற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், குளச்சல் போலீஸ் உதவி சூப்பிரண்டு சாய்சரன் தேஜஸ்வி, இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், முத்துராமன், மண்டைக்காடு கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கோவில் என்ஜினீயர் அய்யப்பன் உள்பட பலர் உடன் சென்றனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS