23
Fri, Jun
10 New Articles

பூதப்பாண்டி கோவில் தை திருவிழா தேரோட்டம்

Hindu

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் கோவில் தைப்பெரும் 9ம் நாள் விழாவில்  தேரோட்டம்   நடந்தது.

 

நாகர்கோவில், பிப்.09: பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் கோவில் தை பெரும் பத்து நாள் திருவிழா கடந்த 31 ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழாவை முன்னிட்டு சுவாமியும் அம்பாளும் பூங்கோவில் வாகனம், கற்பக விருட்ஷம் காமதேனு வாகனம்,பூதவாகனம், சிங்க வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், இந்திர பூங்கோவில் வாகனம், யானை, அன்ன வாகனம், கைலாசபர்வத, கற்பகவிருட்ச வாகனம் மற்றும் பல்லக்கில் தினமும் பவனி வந்தது. மேலும் தினமும் இன்னிசை, செல்லிசை கச்சேரிகளும் , நாதஸ்வர கச்சேரி,நாட்டிய நிகழ்ச்சி உட்பட பல்வேறு கலை நிகழச்சிகள் நடந்தது.

9ம் நாளான நேற்று  காலைசுவாமியும் அம்பாளும்  அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளச்செய்து திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல்  நடந்தது.    இணை ஆணையர் பாரதி, எம்.எல்.ஏக்கள் சுரேஷ் ராஜன், ஆஸ்டின், முன்னாள் தோவாளை பஞ்., யூனியன் சேர்மன் பூதலிங்கம்பிள்ளை, திரவியம்பிள்ளை, அருணாசலம்பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழ ரதவீதியில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக கீழ ரத வீதி வந்து மாலைநிலைக்கு நின்றது. இந்த தேரோட்டத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 10ம்  நாள் விழாவான இன்று (9ம் தேதி)  காலை 10 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் மாலை 6 மணிக்கு ஆறாட்டு வைபோகம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு தெப்போற்சவமும்  அதனைத் தொடர்ந்து மண்டகப்படி மன்பு பூலிங்கசுவாமியிடமிறருந்து அழகியசோழவநங்கை அம்மன் விடை பெறும் காட்சியான அலங்காரவல்லி சப்தாவர்ணம் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில்கள் இணை ஆணையர் பாரதி, கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ஸ்ரீகாரியம் சேதுராம் மற்றும் பூதப்பாண்டி திருப்பணிமன்ற தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் பாண்டியன், செயலாளர் செல்வ குமார், பொருளாளர் வேலப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS