23
Wed, Aug
6 New Articles

Marunthuvazh Malai

Hindu

According to Hindu legend, Kanya Devi, an avatar of Parvati, was to marry Siva, but as he failed to show up on his wedding day, the rice and other grains meant for the wedding feast remained uncooked and remain unused thereafter. As the legend goes, the uncooked grains turned into stones as time went by. Some believe that the small stones on the shore today, which look like rice, are indeed grains from the wedding that was never solemnised. Kanya Devi is now considered a virgin goddess who blesses pilgrims and tourists who flock the town. According to another Hindu legend, Lord Hanuman dropped a piece of earth as he was carrying a mountain with his life-saving herb,Mrita Sanjivani, from the Himalayas to Lanka (Sri Lanka) during the Rama-Ravana war. This chunk of earth is called Marunthuvazh Malai, literally "hills where medicine lives". This is said to be the reason for the abundance of unique native medicinal plants in the area. Marunthuvazh Malai is located near Kottaram about 7 km (4 mi) from Kanyakumari town on the Kanyakumari-Nagercoil highway. The sage Agasthya, who was himself an expert in medicinal herbs, is believed to have lived around this site in ancient days. Some believe this is why so many medicinal herbs are to be found on these hills near Kanyakumari. A nearby village is named Agastheeswaram after the sage. Today, there is a small ashram on the middle of the Maruthuvazh Malai hill, which tourists visit (after a short trek from the base of the hill), both to visit the Ashram and also to take a glimpse of the sea near Kanyakumari a few kilometres away, and the greenery below.

இயற்கை வனப்பில் மெருகேறிய குமரி மாவட்டம் இந்திய மக்களை கவர்ந்தது மட்டுமின்றி உலக மக்களையும் தன்னகத்தே ஈர்த்து வருகிறது. பச்சைப்பசேல் வயல்களுடன் பரந்து விரிந்த தென்னந்தோப்புகள், ஓங்கி உயர்ந்த மலைகள், நீண்டு பரந்த கடற்கரை, அடர்ந்த காடுகள் என நால்வகை நிலங்களை நயமாய் பெற்றுள்ளது. இவையெல்லாம் புராண சம்பவங்களை சான்றாக பகிர்கின்றன. இதிகாசங்களான ராமாயணமும், மகாபாரதமும் குமரி மாவட்டத்தை தொட்டுச் சென்றுள்ளன. அதை நினைவூட்டும் ஊர்களாக வில்லுக்குறி, சொத்தவிளை ஊர்களை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

மூலிகைகள் வளர்ந்த மலை:புராண காலங்களில் நோய் இல்லாமல் இருந்தது இல்லை. ஆனால் அந்த நோய்களுக்கெல்லாம் அருமருந்துகளாய் மூலிகைகள் இருந்துள்ளன. மருந்துகளாக மட்டும் அல்ல, உணவாகவும் அவை இருந்துள்ளன. இன்றும் அவை இருக்கின்றன. தமிழகத்தில் அலோபதி மருத்துவம் ஓங்குவதற்கு முன்பு சித்த மருத்துவமே பிரதான மருத்துவம். அகத்தியரும் அருளிய மருத்துவம் அது.

அகத்தியர் காலத்தில் இருந்து இன்றுவரை சித்த மருத்துவம் குமரி மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வருகிறது. சித்த மருத்துவத்துக்கு மூலமே மூலிகைகள்தான். வனப்பரப்பு மிகுந்த குமரி மாவட்டத்தில் மூலிகைகளுக்கு பஞ்சம் என்றும் வந்ததில்லை.

ஆனால் மூலிகைகள் மட்டுமே வளர்ந்து செழித்த மருந்துவாழ் மலை இன்று, மூலிகைகள் குறைந்து வரும் காடாக மாறி வருகிறது.

மருந்துவாழ் மலை, நாகர்கோவில்-கன்னியாகுமரி ரோட்டில் நாகர்கோவிலில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சுசீந்திரத்தை கடந்து வழுக்கம்பாறை சந்திப்புக்கு சென்றாலே இந்த மலை நமது கண்களில் தென்படும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 அடி உயர மலையாக இந்த மலை அமைந்துள்ளது.

புராணச் சான்று :மருந்துவாழ் மலைக்கும் புராணச் சான்று பகிரப்படுகிறது. ராமாயணத்தோடு அது தொடர்பு படுத்தப்பட்டு உள்ளது. ராவணனுடன் நடந்த யுத்தத்தில் லட்சுமணன் காயம் அடைந்து மயக்கமுற்று விழுகிறார். லட்சுமணனை உயிர்ப்பிக்க சஞ்சீவி மூலிகை தேவைப்படுகிறது. அதை எடுத்துவர அனுமனுக்கு உத்தரவிடப்படுகிறது. பலசாலியான அனுமன் பறந்து செல்கிறார். சஞ்சீவி மலையை அடைந்தபோது மூலிகையின் பெயர் அனுமனுக்கு மறந்து போகிறது. அதை கேட்பதற்காக திரும்ப செல்ல முடியாது, லட்சுமணனை காப்பாற்றியாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இதனால் அனுமன் அந்த சஞ்சீவி மலையையே பெயர்த்து லட்சுமணன் இருக்கும் இடத்துக்கு கொண்டு வருகிறார். அப்படி வரும்போது அவரது கையில் இருந்து பெயர்ந்து விழுந்த ஒரு பாகமே, தற்போதுள்ள மருந்துவாழ் மலை என்று கூறப்படுகிறது. இன்றுவரை மக்கள் அதை நம்புகிறார்கள். மலையின் ஒரு பகுதியில் ஆஞ்சநேயர் மல்லாக்க படுத்தது போன்ற ஒரு தோற்றம் தென்படுகிறது. அதை நேரடியாக பார்க்கும் பக்திமான்கள், ஆஞ்சநேயா! ஆஞ்சநேயா! என்று இறைநாமத்தை சொல்கிறார்கள்.

மருந்துவாழ் மலையில் எத்தனையோ மூலிகைகள் உள்ளன. ஆனால் அதில் விஷச்செடிகள் எதுவுமே கிடையாது என்று அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். அத்தனையும் அருமருந்துகள் என்று கூறப்படுகிறது. மூலிகைகள் செழித்த இந்த மலையில் அய்யா வைகுண்டர் தவம் இருந்ததாகவும், நாராயணகுரு வந்து சென்றதாகவும் மக்கள் கூறுகிறார்கள். அவர்களது வழிபாட்டு தலமும் இங்கு உள்ளது.

கோவில்கள் :

இந்த மலையில் பரமார்த்த லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. திருக்கோவில்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட இந்த கோவிலில் தினமும் வேளாவேளைக்கு பூஜைகள் நடத்துகிறார்கள். பக்தர்களும் திரளாக கலந்து கொள்கிறார்கள். இந்த கோவிலைக் கொண்டே கன்னியாகுமரி அருகே பரமார்த்தலிங்கபுரம் ஊர் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

பரமார்த்த லிங்கேஸ்வரர் கோவிலுக்கு மேல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலையொட்டி ஒரு கல்மண்டபம் உள்ளது. இங்கே இளைப்பாற திண்ணைகள் கட்டப்பட்டு உள்ளன. சமையல் செய்வதற்கான வசதியும் செய்யப்பட்டு உள்ளது. திண்ணையில் இளைப்பாற அமர்ந்தால் கண்கள் தூக்கத்துக்கு சொருகுகின்றன. அந்த அளவுக்கு காற்று ‘ஜில் ஜில்’ என்று வீசுகிறது. மலையேற்ற பாதையில், இடை இடையே சுனைகளும் (தண்ணீர் தேக்கம்) தென்படுகின்றன. ஆங்காங்கே சிறு குகைகளும் உள்ளன. அதில் சித்தர்கள் போல சிலர் வசித்து வருகிறார்கள். இது தவிர மேலும் சில கோவில்களும் இந்த மலையில் உள்ளன. இதனால் இந்த மலை, தற்போது ஆன்மிக தலமாக விளங்குகிறது. இந்த மலையைச் சுற்றி பக்தர்கள் கிரிவலமும் செல்கிறார்கள்.

பராமரிப்பு இல்லை குமரி மாவட்டத்தில் சித்த மருத்துவமனைகள் அதிகமாக இருப்பதற்கு இந்த மலையும் ஒரு காரணமாக இருந்துள்ளது. சித்த மருத்துவர்கள் இந்த மலைக்கு வந்து மூலிகைகளை பறித்துச் சென்றிருக்கிறார்கள். இப்படி மூலிகைகள் செழித்து வளர்ந்து, மருந்துவாழ் மலை என்று பெயரெடுத்த இந்த மலை, முறையான பராமரிப்பு இல்லாததால் இன்று தரிசுக்காடு போல மாறி வருகிறது. மூலிகைகள் எல்லாம் குறைந்து போய் விட்டன. அடிவாரத்தில் மாடுகளும், உச்சியில் ஆடுகளும் மேய்ந்து மூலிகைச்செடிகளை வளர விடாமல் செய்து விட்டன என்றும் சிலர் கூறுகிறார்கள். மலையில் ஏறி சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள். அவர்களால் வீசியெறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், தின்பண்ட பொட்டலங்கள் மலையின் புனிதத்தை கெடுத்து விட்டதாகவே தோன்றுகிறது. போதாக்குறைக்கு காதலர்கள் வேறு. மலையில் வெட்டப்பட்ட படிக்கற்களில் வெட்டவெளியில் அமர்ந்து, சுற்றிச்செல்வோரையும் பொருட்படுத்தாது அவர்கள் காதல்களியாட்டத்தில் ஈடுபடுவது முகம் சுளிக்க வைக்கிறது.

இந்த மருந்துவாழ் மலை வனத்துறையின் கீழ் பூதப்பாண்டி வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் வன அதிகாரிகள் மலையையும், மூலிகைகளையும் பேணி காக்க நடவடிக்கை எடுத்ததுபோல தெரியவில்லை. எனவே, முறையான பராமரிப்பை மேற்கொண்டு, குறைந்து வரும் மூலிகைகளை மீண்டும் வளரச்செய்து பசுமையை காக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS