23
Fri, Jun
10 New Articles

குமரி ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ இயக்க வலியுறுத்தல்

Community Informations

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ மற்றும் கார்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் உள்ளூர் தங்கும் விடுதி சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் சார்பில் அளித்த கோரிக்கை மனு: சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ரயில் மூலம் வருகின்றனர். ரயில் நிலையத்தில் இருந்து தங்குமிடத்திற்கு செல்வதற்காக ஆட்டோ அல்லது காரை வாடகைக்கு அமர்த்தும் போது ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகள் செல்ல விரும்பும் தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்வதை தவிர்த்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கமிஷன் கொடுக்கும் குறிப்பிட்ட சில விடுதிளுக்கு கொண்டு இறக்கிவிடும் நிலை உள்ளது.

மேலும் சுற்றுலாப் பயணிகளிடம் பல தங்கும் விடுதிகளைப் பற்றி தவறான கருத்துகளைக் கூறி, சுற்றுலாப் பயணிகளை திசைதிருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதியடைவதோடு, கூடுதலான கட்டணத்தை செலுத்தவேண்டியுள்ளது.

எனவே சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி கன்னியாகுமரியில் ப்ரீபெய்டு ஆட்டோ, கார் முறையை அமல்படுத்துவதோடு, ஆட்டோ மற்றும் கார்களை வரிசைப்படி இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS