06
Mon, Feb
0 New Articles

Tirparappu Waterfalls (திற்பரப்பு அருவி)

Community Informations

திற்பரப்பு இந்தியாவில் உள்ள  தமிழ்நாடு என்கிற மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கோதையார் நதி திற்பரப்புவின் வம்சாவளி. திருபரப்பு அருவி மன்னர்கள் ஆண்ட கிராமமான  குலசேகரத்தின் அருகில் உள்ளது. இந்த ஆற்றங்கரை சுமார் 300 மீட்டர் நீளம் உள்ளது. நீர் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுகிறது  மற்றும் வருடத்தின் ஏழு மாதங்களுக்கும் நீர்வீழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும். நீர்வீழ்ச்சியின் மேலே அமைந்துள்ள முழு படுக்கையில் ஆன பாறை  திருபரப்பு 250 மிட்டர் நீளம் கொண்டது. இந்த தண்ணீர் சுற்றிலும் உள்ள வயலுக்கு பாசன நீராக பயன்படுத்தப்படுகிறது. 

திற்பரப்பு அணைக்கு எதிரான திசையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்க்கு பலவகையான பாறை படுக்கையில் நீரை தேக்கி சுற்றுப்பரப்பிலுள்ள நெல் வயலுக்கு பாயுமாறு திருப்பப்பட்டுள்ளது.

இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் மகாதேவா கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி ஒரு வலுவான சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் இரு புறங்களையும் இணைக்க வலுவான பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 

பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள இந்தக்  கோவிலின் கட்டிடக்கலை முற்றிலும் கேரள பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின்  உள்ளே உள்ள சிவன் சிலை, நாம் வணங்கும் போது  மனம் மற்றும் ஆன்மா இரண்டிற்கும் ஒரு வித நிம்மதியை கொடுக்கிறது. இந்த சிவன் சிலை ஒரு வித மயக்கும் அழகை தருகிறது. .    அமைதியான சூழலின் மத்தியின் அமைந்துள்ள இந்த கோவிலின் ஆன்மீக ஒளி நம் மேல் படுவதால் நமக்கு நன்மை வந்து சேர்வதை நம்மால் உணரமுடிகிறது. கூட்டம் குறைவாக உள்ளதால் நம்மால் மன நிம்மதியோடு கடவுளை வணங்கி அங்குள்ள கட்டடக் கலையையும், கடவுள் சிலையின் நுணுக்கங்களையும் காண்பதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்ளலாம். இந்தக் கோவிலின் மிக முக்கிய திருவிழாவான சிவராத்திரி கி.பி. 9 ம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியின் பொது தொடங்கப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்து மத காலண்டரின் படி இந்தக் கோவிலின் மிக முக்கிய திருவிழாவான சிவராத்திரியின் போது எண்ணிலடங்காத பக்தர்களின் வருகையும், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும் பூஜையும் மிக முக்கிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. 

கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக சிறந்த சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவி நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. திற்பரப்பு அருவி நாகர்கோவிலில் இருந்து 35 கி.மீ., தூரத்திலும், பேச்சிப்பாறை அணையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. திற்பரப்பு அருவி குமரி குற்றாலம் என்றழைக்கப்படுகிறது.  நீர்விழ்ச்சியின் கீழே நின்று நாம் எடுக்கும் குளியல் நமக்கு ஒரு அருமையான நேரமாக அமைகிறது.  குழந்தைகளுக்கான நீச்சல் குளம் ஒன்றும் அருவியின் அருகில் உள்ளது. நீர்வீழ்ச்சியின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனியாக குளியல் இடம் அமைந்துள்ளது. 

பார்வையாளர்களை மயக்கும் இந்த நீர்வீழ்ச்சி ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் குறிப்பாக பருவமழையின் போதும். திறந்திருக்கும். நுழைவு கட்டணமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தலா ரூ.2 ம், கேமரா கட்டணமாக ரூ.5 ம் வசூலிக்கப்படுகிறது.  

 

Tirparappu Waterfalls

Thiruparappu is a panchayat town in Kanniyakumari district in the Indian state of Tamil Nadu. The Kodayar River makes its descent at Thiruparappu. Thirparappu Waterfalls lies close to the village Kulasekaram which was ruled by kings. This riverbed is about 300 meters length. The water pours down from the height of nearly 50 feet and water flows this fall about seven months in a year. The whole bed above the falls is one rocky mass which extends 250 metres (820 ft) upstream where the Thirparappu weir has been constructed for supplying water to the paddy fields.

Thiruparappu Dam is built on a rocky bed spanning far across the distance covering one fourth of a kilometer in the direction against the water current, and water flows further to paddy fields. There is temple dedicated to Lord Mahadeva near to this fall and there is strong wall surrounded to this temple. On either side of the river, on the left bank of the river in between the waterfalls and the weir, there is a temple dedicated to Shiva enclosed by strong fortification.

The architecture of the temple has been entirely structured in Kerala style and is quite popular among the visitors.  The temple consists of a circular shape structure with a conical doom. The idol of Lord Shiva, inside the temple, gives you a peace of mind and soul. The idol has been one of the most alluring ones in the region. The temple is not much crowded, which adds to the advantage of getting an opportunity to observe the spiritual aura of this temple amid a peaceful and tranquil surroundings. The temple has a significant historic value as it includes some important inscription carved on its walls, mentioning the events occurred during the rule of the Pandiyas that can be dated back to the 9th century A. D. The most important festival celebrated at this temple is Shivratri. One can find large number of devotees and is one of the most important festivals at this temple and one can find several devotees and pujas being performed on significant days dedicated to Lord Shiva according to the Hindu calendar.

Thiruparappu Waterfalls is an excellent tourist spot in Kanyakumari district situated in Nagercoil to Trivandram highway. Thiruparappu falls is situated 35 KMs from Nagercoil and about 15 KMs from Pechiparai Dam. Thiruparappu water falls is also called as “Kumari Kuttalam”. People visiting the falls can dearly enjoy having a good bath under the water stream. They can spend an excellent time in standing underneath the light thudding water stream. There is a small swimming pool constructed for children by Administration. The place also has separate areas for men and women to enjoy bathing under the waters of the falls. IT ensures a safe and enjoyable experience for the visitors.

This place is Peaceful and enchanting. The place is open to the visitors throughout the year, especially during the monsoon season, when the fall is in full flow. Entry Fees is Rs. 2 per head for both children and adults. Rs. 5 for camera fee. Good For Nature Lovers and adventure Seekers. 

BLOG COMMENTS POWERED BY DISQUS