கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி, அக்.20: கன்னியாகுமரியில், ரூ.16 லட்சத்து 89 ஆயிரம் செலவில் கடற்கரை சுற்றுலா இணைப்பு சாலைகள், ரூ.8 லட்சத்து 84 ஆயிரத்தில் கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்திற்கான உபகரணங்கள், ரூ.6 கோடியே 79 லட்சத்தில் கடல் காட்சியை கண்டு களிப்பதற்கான இருக்கைகள் அமைப்பதற்கும், ரூ.98 லட்சத்து 25 ஆயிரத்தில் சிலுவை நகர் முதல் சூரியன் மறையும் இடம் வரை அலங்கார தரை கற்கள் அமைப்பதற்கும், ரூ.27 லட்சத்து 64 ஆயிரத்தில் கன்னியாகுமரி பேரூராட்சிக்கான கனரக இயந்திரங்கள் வாங்குவதற்கான பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடக்கிறது.
இந்த பணிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தரமானதாக இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.