23
Tue, Oct
10 New Articles

மேம்பால பணிக்காக பார்வதிபுரம் போக்குவரத்து மாற்றம்

News

நாகர்கோவில், மார்ச் 17: பார்வதிபுரம் மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம் நேற்று மதியம் முதல் சோதனை ஓட்ட முறையில் அமலுக்கு வந்தது.

பார்வதிபுரத்தில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கி மேம்பால பணிகள் நடந்து வருகிறது. தற்போது  பில்லர் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக போக்குவரத்து மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அதன்படி முதல் கட்டமாக 3 நாட்கள் சோதனை ஓட்டத்தில் நேற்று மதியம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

நாகர்கோவிலுக்கு வரும் வாகனங்கள் திருவனந்தபுரம், களியக்காவிளை, கொல்லங்கோடு, மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை, கருங்கல், குளச்சல், திங்கள்நகர், இரணியல்  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் வாகனங்கள் எப்போதும் வருவது போல் பார்வதிபுரம் வழியாக நாகர்கோவிலுக்கு வர வேண்டும்.

வடசேரியில் இருந்து செல்லும் வாகனங்கள் வடசேரியில் இருந்து திருவனந்தபுரம், களியக்காவிளை, மார்த்தாண்டம், தக்கலை, இரணியல், திங்கள்நகர், கருங்கல், குளச்சல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் வெட்டூர்ணிமடம் ஜங்ஷன் வந்து அங்கிருந்து பால்பண்ணை ஜங்ஷன் வழியாக டெரிக் ஜங்ஷன் சென்று அங்கிருந்து ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் சென்று அங்கிருந்து தனித்தனியாக வாகனங்களின் தன்மையை பொறுத்து பிரிந்து செல்கிறது.

கார்கள், குட்டி யானை டைப் வாகனங்கள் ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜியிலிருந்து போலீஸ் ஸ்டேசன் சென்று அதன் அருகில் உள்ள ரோடு வழியாக வேம்பனூர் சென்று அங்கிருந்து இரணியல் சென்று செல்ல வேண்டும். பள்ளி, , லாரி, கனரக, டூரிட்ஸ் வாகனங்கள் ஆசாரிபள்ளம் போலீஸ் ஸ்டேசன் சென்று அங்கிருந்து பேயோடு சென்று  அங்கிருந்து இரணியல் வழியாக செல்ல வேண்டும்.

அரசு பஸ்கள் மட்டும் ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் சென்று அங்கிருந்து பள்ளவிளை வழியாக பார்வதிபுரம் சென்று செல்ல வேண்டும்.

இந்த பாதைகளில் அந்தந்த குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்படும். எதிரே வாகனங்கள் வராமல் ஒன்வே முறை செயல்படுத்தப்படுகிறது. இதன்படி போக்குவரத்து மாற்றம் சோதனை ஓட்ட முறையில் 3 நாட்கள் நேற்று மதியம் முதல் அமலுக்கு வந்துள்ளது. பின்னர் இந்த முறையே  தொடரும் என போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள் ஒய்சிலின் சேவியர் தெரிவித்தார்.      

BLOG COMMENTS POWERED BY DISQUS