15
Fri, Dec
18 New Articles

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

News

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நவ. 30:  தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கன்னியாகுமரிக்கு தென் கிழக்கே நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மூன்று மாவட்டங்களிலும்  இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS