15
Fri, Dec
18 New Articles

இந்திய–சீன எல்லையில் பணியாற்றிய குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் குண்டு பாய்ந்து பலி

News

இந்திய–சீன எல்லையில் பணியாற்றி வந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பலியானார். குண்டு பாய்ந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

திருவட்டார், நவ.30: குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள கல்லங்குழி பகுதியை சேர்ந்தவர் தாசன். இவரது மகன் ஜஸ்டின் கிறிஸ்டோபர் (வயது 27). ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இமாசல பிரதேச மாநிலத்தில் இந்திய–சீன எல்லை பகுதியில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் அவரது வீட்டிற்கு ராணுவ அதிகாரி ஒருவர் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, ஜஸ்டின் கிறிஸ்டோபர் குண்டு பாய்ந்து இறந்து விட்டதாகவும், உடல் மீட்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அவர் எப்படி இறந்தார்? என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று (வியாழக்கிழமை) அல்லது நாளை திருவனந்தபுரம் வழியாக சொந்த ஊர் கொண்டு வரப்பட உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS