15
Fri, Dec
18 New Articles

தற்காலிக வியாபாரிகள் திடீர் கடையடைப்பு போராட்டம்

News

கன்னியாகுமரியில் தற்காலிக சீசன் கடைவியாபாரிகள் திடீர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி, நவ.21: கன்னியாகுமரியில் சபரிமலை சீசனை முன்னிட்டு சுமார் 600-க்கும் மேற்பட்ட தற்காலிகடைகள் பஞ்., நிர்வாகம் சார்பில் 6 அடிக்கு 6 என்ற அளவில் ஏலம் விடப்பட்டுள்ளது.இதன்மூலம் கன்னியாகுமரி பஞ்.,சிற்கு 2 கோடி ரூபாய்க்கு அதிகமான வருவாய் கிடைத்துள்ளது. சன்னதிதெரு, கடற்கரைசாலை. காந்திமண்டபசாலை ஆகிய இடங்களில் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடந்துவரும் நிலையில் பஞ்.,நிர்வாகம் அனுமதித்த அளவை விட கூடுதலாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாவும், சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு இடையூறு இருப்பதாக வந்த புகாரை அடுத்த கன்னியாகுமரி  போலீசார் கடைகளை பஞ்.,விதிமுறைகள் படி நடைமுறைபடுத்துவதாக நடவடிக்கை எடுத்தனர். இதற்கு தற்காலிக கடை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சிறிதுநேரம் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS