15
Fri, Dec
18 New Articles

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை திட்டம்: சிறப்பு முகாம்

News

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்க அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

நாகர்கோவில், நவ.21:  மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட  மாற்றுத் திறனாளிகளின் முழு விபரங்கள் www.swavlambamcard.gov.in என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான பணிக்கான சிறப்பு முகாம்கள் இன்று முதல் (21ம் தேதி) நடக்கிறது. ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  22ம் தேதியும், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  23ம் தேதியும், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  24ம் தேதியும், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 27ம் தேதியும், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 28ம் தேதியும், தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 29ம் தேதியும், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 30ம் தேதியும் நடக்கிறது. அனைத்து முகாம்களும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. மாற்றுத் திறனாளிகள் அனைவரும்  முகாம்களில் மாற்றுத் திறனாளிகளின் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அலுவலக செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS