15
Fri, Dec
18 New Articles

விவேகானந்த கேந்திராவில் நேற்று நமாமிசங்கரம் துவக்கம்:200 மடாதிபதிகள் பங்கேற்பு

News

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் ஸ்ரீஆதிசங்கரர் அருளிய சாங்கரபாஷ்ய-பாராயணாஞ்சலி நிகழ்ச்சி நேற்று துவங்கி டிசம்பர்  3ம் தேதி வரை நடக்கிறது. நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் பங்கேற்கின்றனர்.

கன்னியாகுமரி, நவ. 20: இது குறித்து வெள்ளிமலை ஆசிரமம் சுவாமி சைதன்யானந்த மகராஜ்  கூறிதாவது;-அத்வைத வேதாந்தத்தை அடிப்படையாக கொண்டு உயர்ந்து விளங்கும் பாரத பண்பாடானது இன்றும் உலகத்தால் போற்றப்பட்டு உலகிற்கே குருவாகி விளங்கி கொண்டிருக்கிறது. பல நுற்றாண்டுகளுக்கு முன் ஒப்பற்ற இந்த பண்பாட்டை ஒழுங்குபடுத்தி பலமிக்கதாக ஆக்கிய பெருமை ஸ்ரீஆதிசங்கராச்சாரியாரையே சாரும்.

இதற்காக பிரஸ்தான திரயமான பத்து உபநிஷத்துகள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை போன்றவற்றிற்கு உயர்வானதோர் விளக்கவுரையை எழுதியுள்ளார். ஆதிசங்கரரின் படைப்புகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பது என்ற லட்சியத்தில் இமயமலையின் ரிஷிகேஷில் அமைய பெற்றுள்ள கைலாச ஆஸ்ரமத்தின் தசமபீடாபதியாக விளங்கிய பிரம்பலீன் ஆச்சாரிய மஹாமண்டலேஸ்வரர் சுவாமி வித்யானந்தகிரிஜி மஹாராஜ் நடைமுறைபடுத்திய பல திட்டங்களுள் ஒன்று சாங்கரபாஷ்ய-பாராயணாஞ்சலி. இதனை பாரதம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் கேரள மாநிலம் காலடியில் துவங்கிய பாராயண நிகழ்ச்சி இந்தியாவின் முக்கியமான இடங்களில் நடந்துள்ளது. 10வது நிகழ்ச்சியாக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் நேற்று துவங்கியது.

             நேற்று காலை சூரிய உதயத்தில் திருக்கொடியேற்றுதல், காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 121 வேத பண்டிதர்கள் கலந்துகொள்ளும் மஹாருத்ரஜபம், மாலை 3.30 மணிக்கு கடற்கரை ஆதிசங்கரர் கோயிலில் இருந்து விவேகானந்தா கேந்திரா வரை ஊர்வலம் நடந்தது.  தொடர்ந்து காலை முதல் மாலை வரை பாராயணம், கருத்தரங்கம், பூஜை. ஹோமங்கள், கலந்துரையாடல், ஸ்ரீமத்பகவத்கீதை சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. டிசம்பர் 2ம் தேதி சாதுக்கள் பங்கேற்கும் ஊர்வலம், மஹாசண்டி யாகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நிகழ்ச்சியில்  நாட்டின் முக்கிய மடாதிபதிகள், சாதுக்கள் பங்கேற்றனர் .

BLOG COMMENTS POWERED BY DISQUS